
ramar talk about priyanka
தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மற்றும் கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா. மேலும் பல சீசன்களை கடந்து செல்லும் இந்த நிகழ்ச்சியை போட்டியாளர்களுக்காக மட்டுமின்றி பிரியங்காவிற்காக பார்ப்பவர்களும் பலர்.
பிரியங்கா எப்பொழுதும் தன்னை தானே கலாய்த்துக் கொள்வார், மேலும் அவரை கலாய்க்குமாறு வேறு யாராவது எதையாவது கூறினாலும் முகம் சுழிக்காமல் சிரித்தே சமாளிப்பார். மேலும் இவரின் சிரிப்புக்கெனவே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்தநிலையில், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செண்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த மானசாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் செண்பாவிற்கு திருமணம் செய்து வைக்கப்போவதாக தொகுப்பாளினி பிரியங்கா நிகழ்ச்சி ஒன்றில் கூறுகின்றார். அதற்கு நகைச்சுவை நடிகர் ராமர் “ நீ இப்ப என்ன வேலை செய்யுற தெரியுமா” என கூறி கலாய்த்துள்ளார்.
Advertisement
Advertisement