பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
சித்ராவை அந்த மாதிரி வீடியோ எடுத்து நான் மிரட்டினேனா?? முதன்முறையாக உண்மையை உடைத்த ரக்ஷன்!
பிரபல பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும், விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்த நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவருக்கு ஹேமந்த் என்பவருடன் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தநிலையில், இரு மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது அவரது கணவர்தான் என உறுதி செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையில் நடிகை சித்ரா விஜய் டிவி தொகுப்பாளர், நடிகருமான ரக்ஷனுடன் டேட்டிங் சென்றதாகவும் அப்போது ரக்ஷன் சித்ராவுடன் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து அவரை மிரட்டி வந்ததாகவும் சித்ராவின் நெருங்கிய தோழி ஒருவர் கூறியதாக தகவல்கள் பரவியது.
அந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி, ரக்ஷனா இப்படி? என்று பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இதுகுறித்து ரக்ஷன் விளக்கமளித்து கூறியதாவது,
விஜய் டிவி ஷூட்டிங்கின்போது சித்ராவை சிலமுறை சந்தித்திருக்கிறேன். என்னையும் சித்ராவையும் வைத்து தவறான தகவல்களைப் பரப்பினார்கள். இது முழுவதும் பொய். ஒரு பொய்யான வதந்தியை பரப்பினால் எவ்வளவு வேதனையும் வலியும் இருக்கும் என்பது பாதிகப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். இன்று உயிருடன் இருந்தால், சித்ராவே கடவுள் சாட்சியாக மறுப்பு தெரிவித்திருப்பார்.
நான் கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் உள்ளது. நான் பணமெல்லாம் சம்பாதிக்கவில்லை. நான் சம்பாதித்ததெல்லாம் பேர் மட்டும்தான். அதையும் இப்படி கெடுப்பது வருத்தமாக இருக்கிறது. தயவுசெய்து இதை யாரும் நம்பவேண்டாம். நான் கஷ்டத்தில் வளர்ந்தவன். எப்படி இந்தமாதிரியான கொடூரமான காரியத்தை செய்வேன். நான் சித்ராவின் இறுதி சடங்கிற்கு கூட சென்றிருந்தேன். அப்பொழுது கூட ஹேமந்த் பற்றிதான் குறை கூறி பேசிக்கொண்டிருந்தோம் என வேதனையுடன் கூறியுள்ளார்.