என்னது.. தற்கொலை செய்துகொள்ள நினைத்தாரா? வைரலாகும் ரஜினிகாந்தின் வீடியோ! ஷாக்கான ரசிகர்கள்!!

தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்!ஆனா அப்பொழுது..வைரலாகும் ரஜினிகாந்தின் வீடியோ! ஷாக்கான ரசிகர்கள்!!


rajinikanth-old-video-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் ரஜினி. இவருக்கென நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் 1992 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

அதில் அவர், நான் ஆரம்பத்தில் ஆபீஸ்பாய், கார்பெண்டர், கூலி உள்ளிட்ட பல வேலைகளை செய்து வந்தேன். பிறகுதான் எனக்கு பேருந்தில் கண்டக்டர் வேலை கிடைத்தது, நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். அதனால் எப்படியும் பணம் சம்பாதித்து பணக்காரராக வேண்டுமென ஆசைப்பட்டேன்.

நான் பொதுவாக எந்த விஷயத்திற்கும் பயந்தது கிடையாது. ஆனால் ஒருமுறை மிகவும் பயந்துவிட்டேன். அப்பொழுது தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட முடிவு செய்தேன். அப்போது நான் இருந்த இடத்திற்கு பக்கத்தில் மலையில் சாமியார் ஒருவரின் புகைப்படம் இருந்தது.

அதை பார்த்தவுடன் மன நிம்மதி கிடைத்தது. பின் வீட்டிற்கு போய் விட்டேன். அப்போது நான் தூங்கிக் கொண்டிருந்த போது என் கனவில்  காவி ஆடையணிந்த தாடி வைத்த நபர் ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருக்கிறார். நான் அவரிடம் செல்ல ஆற்றில் நீந்தாமல் ஓடி செல்கிறேன். பின் கண் விழித்து பார்த்தால் அந்த புகைப்படத்தில் இருந்தவர்தான் கனவில் வந்தவர் என புரிந்தது. பிறகு நான் அவரது பெயர் கேட்டதற்கு ராகவேந்திரா சாமி என்று கூறினார்கள். அப்போதிலிருந்து அவருக்காக விரதமிருந்து நான் பூஜை செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.