கமலஹாசனை எதிர்பார்த்து அவரின் வீட்டு வாசலிலே காத்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான உண்மை சம்பவம்.?
கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் அனைவரும் அறிந்ததே. பஸ் கண்டக்டராக இருந்து படிப்படியாக நடிக்க தொடங்கி தற்போது சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்துள்ளார்.
அன்றிலிருந்து இன்று வரை இவரின் நடிப்பிற்காக ரசிகர் கூட்டம் பெருகி கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் 'ஜெயிலர்' திரைப்படம் படப்பிடிப்பு நிறைவு பெற்று திரையரங்கில் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது.
இது போன்ற நிலையில், கமலஹாசன் வீட்டு வாசலில் ரஜினிகாந்த் காத்து கிடந்தார் என்ற செய்தியை தற்போது நடிகை சுகாசினி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அப்பேட்டியில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்த 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது ரஜினிதான் தன் கார் மூலம் படத்தில் நடித்த பிரபலங்களை அழைத்து வருவாராம்.
அந்த கார் கமலை பிக்கப் செய்ய வரும் போது அவரின் வீட்டின் வாசலில் ரஜினி அங்கும் இங்குமாக நடந்து அவர்கள் வருவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். ரஜினியை வீட்டினுள் அழைக்க கூட மாட்டார்களாம். இவ்வாறு சுகாசினி ரஜினியை மட்டம் தட்டி கமலஹாசனை பெருமையாக பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.