அடஅட.. வேற லெவலில் இருந்துச்சு! கன்னட நடிகருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ்.!

அடஅட.. வேற லெவலில் இருந்துச்சு! கன்னட நடிகருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ்.!


Rajini surprise to kannada actor for 777 charlie movie

கிரண்ராஜ் இயக்கத்தில் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் உருவான படம் 777 சார்லி. இந்தப் படத்தில் நடிகர் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது பாபி சிம்ஹாவின் முதல் கன்னட படமாகும். கன்னடத்தில் உருவான இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது. 

கடந்த 10-ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மனிதனுக்கும், நாய்க்கும் இடையேயுள்ள பாசத்தினை மையமாக கொண்டு உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரக்‌ஷித் ஷெட்டிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

rajini

அவர் கூறியதாவது, ரஜினிகாந்த் சாரிடமிருந்து எனக்கு போன் வந்தது. 777 சார்லி படத்தை பார்த்துவிட்டு அவர் பிரமித்து போனாராம். படம் தரமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், படத்தின் ஆழமான வடிவமைப்பு குறித்தும், குறிப்பாக படத்தின் ஆன்மிக ரீதியான க்ளைமாக்ஸ் குறித்தும் வியந்து பேசி வாழ்த்து கூறினார். மேலும் சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இப்படிபட்ட வார்த்தைகளை கேட்பது மிகவும் அற்புதமாக உள்ளது. மிக்க நன்றி சார் என பதிவிட்டுள்ளார்.