லக்னோவில் ரஜினிக்கு பலத்த பாதுகாப்பு...! காரணம்?

லக்னோவில் ரஜினிக்கு பலத்த பாதுகாப்பு...! காரணம்?


rajini-safe-at-lakno

நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பேட்ட என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் செய்து வருகிறார்...
இந்த படத்தில் இந்தி நடிகர் நவசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா,பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்...
இதை அடுத்து ஒரு சில நாளிற்கு முன்னதாக பேட்ட படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது.. அது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்றது... இந்த படக்குழு முதல் கட்டமாக டார்ஜலிங் மற்றும் டேராடூனில் நடந்து முடிந்தது.

அதற்குப்பின் கடந்த சில தினமாக சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. இதற்கு அடுத்தபடியாக உத்திரபிரதேசத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது...  இந்த படப்பிடிப்பிற்காக கடந்த 7ஆம் தேதி சென்னையிலிருந்து உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோவிற்கு விமானத்தில் சென்றார். அவருக்கு காவலாக ரஜினியுடன் 40 பாதுகாவலர்களும் விமானத்தில் சென்றனர்.
இந்நிலையில் லக்னோவில் ரஜினியை பார்த்துவிட்டு ரசிகர்கள் ஏராளமாக குவிந்தனர். அங்கிருந்தும் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார்...


லக்னோவை தொடர்ந்து பல இடங்களில் குறிப்பாக சவுக், மகினாபாத், சீதாபூர், பராபாஸ்கி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பின்போது புகைப்படங்கள் வெளியாகி விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ள படக்குழு, இதற்காக கையடக்க தொலைபேசிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

மேலும் படப்பிடிப்பின் பொது ரஜினியை ரசிகர்கள் நெருங்காமல் இருக்க மற்றும் படப்பிடிப்பு பாதிக்காமல் இருக்க  25 போலீஸ் போடப்பட்டு இருக்கிறது...