சினிமா லைப் ஸ்டைல்

இளம் வயது நடிகையுடன் நடிக்கும் ரஜினி

Summary:

 ரஜினியின் அடுத்த படத்தில்  அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார். பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி  ரஜினி நடிக்கும்  படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்தது. இந்நிலையில் படத்தில் சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய படம்

ரஜினி இனிமேல் தன் மகள் வயது பெண்களுடன் டூயட் பாடப் போவது இல்லை என்று  காலா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். இதையடுத்து சீனியரான சிம்ரன் ஹீரோயினாக ஒப்பந்தமானார். இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக மலையாள  நடிகை  மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மஜித் மஜிதியின் பியான்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்துள்ளார். பியான்ட் தி கிளவுட்ஸ் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியானது. மாளவிகா ரஜினியின் மகள்களை விட வயதில் மிகவும் சிறியவர். அப்படி என்றால் ரஜினி காலா இசை வெளியீட்டு விழாவில் சொன்னதை செய்யவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


Advertisement