
ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் துவங்கப்பட்டது.
இதனையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு நெகடிவ் என்பது தெரியவந்தது. ரஜினிக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை, ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவ நிர்வாகம் தெரிவித்தது.
நேற்று இருந்ததைவிட ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தாலும், அது வழக்கத்திற்கு அதிகமான அளவில் இருப்பதால் ரஜினிகாந்த் தொடர்ந்து நெருக்கமாக கண்காணிக்கப்படுவார், அவரைப் பார்க்க வருகை தருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவரது ரத்த அழுத்தம் எந்த அளவு கட்டுப்பாட்டுக்கு வருகிறது என்பதைப் பொருத்து ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மாலை முடிவு எடுக்கப்படும் என மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement