அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்... இப்ப இல்லன்னா எப்பவுமே இல்ல.. பரபரப்பை கிளப்பும் ரஜினி போஸ்டர்.!

அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்... இப்ப இல்லன்னா எப்பவுமே இல்ல.. பரபரப்பை கிளப்பும் ரஜினி போஸ்டர்.!


rajini-fans-who-invite-politics-rajinikanth-poster-paste-in-vellore-district

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் எப்போது அரசியலுக்கு வருவார். எப்போது கட்சி தொடங்குவார் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வந்தாலும் முதல்வர் ஆக விரும்பவில்லை. 

நல்லவர், நேர்மையானவர், அறிவாளியாக உள்ள ஒருவரை முதல்வராக அமர்த்தி ஒரு குழு ஆட்சிக்கு வழிகாட்டும் என்று ரஜினி தெரிவித்தார். மேலும் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிகம் வாய்ப்பு தர உள்ளதாகவும் தெரிவித்தார்.

rajini

அதுமட்டுமின்றி மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன். அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம், இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த். ரஜினியின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் தற்போது அதே கருத்தை மையமாக கொண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள், நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு முழுமையாக இறங்கக்கோரும் சுவரொட்டிகளை ஒட்டி வைரலாக்கி வருகின்றனர். அந்த போஸ்டரில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், கட்சி வேறு, ஆட்சி வேறு. இப்ப இல்லனா, எப்பவுமே இல்லை. சிந்திப்பீர் செயல்படுவீர் என்ற வசனங்கள் அடங்கிய போஸ்டர்கள் மூலம் வைரலாகி வருகின்றனர்.