தேடிவந்த ரசிகரை உதாசினப்படுத்திய ரஜினி! இப்படியா செய்வது? வைரலாகும் வீடியோ!
தேடிவந்த ரசிகரை உதாசினப்படுத்திய ரஜினி! இப்படியா செய்வது? வைரலாகும் வீடியோ!

இந்திய அளவில் பிரபலமான தமிழ் நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் ரஜினி. ஒரு வருடத்திற்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், அணைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார் ரஜினி. அதுமட்டும் இல்லாமல் அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாகவும் நடித்து வருகிறார்.
கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்தார் ரஜினி. பேட்ட படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பேட்ட படத்தை தொடர்ந்து AR முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார்.
இந்நிலையில் பொங்கல் தினமான நேற்று அனைத்து பிரபலங்களும் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறினார். அந்த வகையில் தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூற ரஜினி வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் ரஜினியை பார்த்ததும் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள்.
அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் ரஜினிக்கு கைகொடுக்க சென்றார். ஆனால், அவரை சற்றும் மதிக்காதா ரஜினி அந்த ரசிகருக்கு கை கொடுக்காமல் உதாசீனப்படுத்தியுள்ளார். அதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ.