சினிமா

நடிகை கஸ்தூரி என்னை ஹோட்டலுக்கு வரவைத்து அதை செய்ய சொன்னார்!. ரசிகர் பாலியல் புகார்!

Summary:

நடிகை கஸ்தூரி என்னை ஹோட்டலுக்கு வரவைத்து அதை செய்ய சொன்னார்!. ரசிகர் பாலியல் புகார்!


நடிகை கஸ்தூரியை அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அணுகி தங்கள் கட்சியில் இணையுமாறு வற்புறுத்தியதாக தகவல் வெளியானது.

ஆனால், நான் எந்த கட்சியிலும் இணையவில்லை என்று கஸ்தூரி மறுத்துவந்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் படத்தை டுவிட்டர் முகப்பில் வைத்துள்ள ஒருவர், #Metoo என்ற ஹேஸ்டேக் மூலம் தவறாக பேசியுள்ளார்.

அதில், கஸ்தூரி தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்து தொடும்படி கூறியதாகவும், அதற்காக பணம் தருவதாக சொன்னதாகவும் கூறினார் ஆனால் நான் மறுத்து விட்டேன் என்றும் பதிவிட்டு இருந்தார்.

இதனை, ரஜினிகாந்த் ரசிகர்களும் கண்டித்ததுடன், அந்த நபர் ரஜினி ரசிகராக இருக்க முடியாது என்றும் பதிவிட்டுவந்தனர். மேலும் அந்த நபருக்கு கஸ்தூரி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.  

நடிகை கஸ்தூரி அந்த பதிவில் கூறும்போது, அட பொய் சொல்லும்போது கூட உண்மையை உளறிட்டான் பாருங்க. அவனால் முடியாதுதான். முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆக வேண்டும். ரஜினி பெயரை கெடுக்க இந்த மாதிரி எத்தனைபேர் அலைகிறார்களோ என்று கூறியுள்ளார்.


Advertisement