முதல் நாள் முதல் ஷோவை பார்த்த ரஜினியின் குடும்பத்தினர்! வைரலாகும் புகைப்படம்.

முதல் நாள் முதல் ஷோவை பார்த்த ரஜினியின் குடும்பத்தினர்! வைரலாகும் புகைப்படம்.


Rajini darpar

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தலைவரின் 168 வது படமாக பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் தான் தர்பார். இப்படத்தில் நடிகர் ரஜினி நீண்ட நாட்களுக்கு பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். மேலும் அனிருத் இசையில் உருவான பாடல்கள் அனைத்து செம மாஸாக ரசிகர்கள் ரசிக்கும் வகையில் உள்ளது. 

Darpar

மேலும் தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை பார்ப்பதற்கு பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கில் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க ரஜினி குடும்பத்தினர் சென்றுள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.