தமிழகம் சினிமா

ரஜினி விஜய் சேதுபதி இடையே மோதல்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த முடிவு என்ன?

Summary:

ரஜினி அரசியலில் இறங்குவதை உறுதி செய்த பிறகு, கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் முதல்முதலாக நடித்து வருகிறார். இதனால் இந்த படத்தை பற்றிய ஒவ்வொரு செய்திகளும் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதியும் இணைந்திருப்பது விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார் என்ற செய்திகள் பரவி வருகின்றன. 

karthik subbaraj க்கான பட முடிவு

இந்நிலையில் ரஜினி மற்றும் விஜய் சேதுபதி மோதிக்கொள்ளும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், ‘காலா’ படத்தை முடித்த பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங் மற்றும் டேராடூன்  என பல்வேறு பகுதியில் நடந்தது.

இந்த படத்தின் மிக முக்கியமான காட்சிகள் மட்டும் சென்னை பின்னி மில் அரங்கில் படமாக்கப்பட்டது. அதில் நடிகர் ரஜினிகாந்த்–விஜய் சேதுபதி நடித்த சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. விஜய் சேதுபதி ரஜினியுடன் மோதும் காட்சி இருந்ததை உறுதி படுத்தியதும், விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இப்படம் உள்ளது.

இந்த படத்தின் மூன்றாம்  கட்ட படப்பிடிப்பை லடாக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்க போவதாக டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் இப்போது நடைபெறுகின்றன..
 


Advertisement