44 வருஷங்களுக்கு பிறகு ரீமேக்காகும் ரஜினி- கமலின் கிளாசிக் சூப்பர்ஹிட் திரைப்படம்!! யாரெல்லாம் நடிக்கபோறாங்க பார்த்தீங்களா!!rajini-and-kamals-aval-appadithan-movie-remake-CKS9FK

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவரது படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமலுக்கென உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ஆரம்ப காலகட்டத்தில் அவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். அவ்வாறு அவர்களது நடிப்பில் 1978ம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சிறந்த படங்களில் ஒன்றுதான் அவள் அப்படித்தான். சி.ருத்ரய்யா இயக்கத்தில் உருவான இப்படம் ஆணாதிக்க சமூகத்தில் சிக்கி கடும் இன்னல்களை அனுபவித்த இளம்பெண் ஸ்ரீபிரியா அதிலிருந்து மீள போராடும் கதையை மையமாகக் கொண்டது. 

rajini

ஆணாதிக்கவாதியாக ரஜினி, முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞராக கமல் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இப்படத்தை ரீமேக் செய்ய பாணா காத்தாடி படபுகழ் பத்ரி வெங்கடேஷ் திட்டமிட்டதாகவும், ஆனால் படத்தின் இயக்குனர் ருத்ரய்யா காலமானதால் படத்தின் உரிமையை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் பிரச்சினைகள் சரியானதால் பத்ரி வெங்கடேஷ் தற்போது  அவள் அப்படித்தான் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன், கமல் மற்றும் ரஜினி கதாபாத்திரத்தில் சிம்பு மற்றும் பஹத் பாசில் ஆகியோரை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது