தலைவர் படத்திற்கு தடையா! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தலைவர் படத்திற்கு தடையா! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


Rajini

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168 வது படமாக உருவாகியுள்ள படம் தான் தர்பார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். 

இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான சும்மா கிழி பாடல் வெளியாகிய 18 மணி நேரத்திலேயே 6.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

rajini

மேலும் இப்படத்தின் முன்பதிவுகள் பல இடங்களிலும் தொடங்கிவிட்டன. இப்படத்தின் வருகைக்காக படக்குழு மிக ஆவலுடன் எதிர்ப்பாத்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது மலேசியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ரஜினியின் 2.0 பட தயாரிப்புக்காக வாங்கிய கடனை இன்னும் திருப்பி செலுத்தாததால் தர்பார் படத்திற்கு தடை கேட்டு பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திடம் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.