அட அட!! நம்ம நாட்டுப்புறப் பாடகி ராஜலட்சுமியா இது... மாடர்ன் லுக்கில் எப்படி உள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் புகைப்படம்!!

அட அட!! நம்ம நாட்டுப்புறப் பாடகி ராஜலட்சுமியா இது... மாடர்ன் லுக்கில் எப்படி உள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் புகைப்படம்!!


Rajalakshmi morden look photos viral

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சியில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இதில் ஜூனியர், சீனியர் என ஏராளமான சீசன்கள் நடைபெற்று வருகின்றன. அதில் சூப்பர் சிங்கர் சீனியர் 6வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு நாட்டு புற இசையின் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர்.

இவர்களில் செந்தில் கணேஷ்  நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று பட்டத்தை வென்றார். அதன் மூலம் அவருக்கு தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடும் வாய்ப்பு குவிந்தது.  செந்தில் மற்றும் ராஜலட்சுமி சார்லி சாப்ளின் 2 படத்தில் பாடிய சின்ன மச்சான் பாடல் இன்றுவரை பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்புகிறது. மேலும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ராஜலட்சுமி பாடிய ஏ சாமி பாடல் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானது.

rajalakshmi

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் அவ்வப்போது போட்டோ ஹூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மாடர்ன் லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளனர்‌. அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அட கிராமத்துல இருந்து வந்த நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமியா இது? என அதிர்ச்சியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

rajalakshmi