ரூ.9 கோடி இழப்பீடு வேண்டும்.. நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கு.! ஏன்? என்ன நடந்தது?
அடேங்கப்பா.. இந்த பிரபல நடிகர்தான் அவரோட காதலரா? பிறந்தநாளில் முதன்முறையாக சீக்ரெட்டை உடைத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் வந்தது.
பின்னர் அவர் சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே என்ற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகை ரகுல் பிரீத் சிங் ஹிந்தி மற்றும் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக செம பிசியாக வலம் வருகிறார். இந்த நிலையில் அவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல் முறையாக இந்தி திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் என வலம் வரும் ஜாக்கி பாக்நானியை காதலிப்பதை உறுதிசெய்து அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் அவர், என் வாழ்க்கையில் வண்ணத்தைச் சேர்த்த உனக்கு என்னுடைய நன்றி. என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கு நன்றி. நீ நீயாக இருப்பதற்கு நன்றி. இன்னும் ஒன்றாகச் சேர்ந்து அதிக நினைவுகளை உருவாக்குவதற்கு.. என தெரிவித்துள்ளார்.