சினிமா Covid-19

மக்களின் அழுகுரல் என்னை தூங்கவிடவில்லை..! 3 கோடி இல்லை.! மேலும் தருகிறேன்..! அதிக நிதியுதவி அளிக்க ராகவா லாரன்ஸ் திட்டம்.

Summary:

Raghava lawrence plans to donate more for corono

கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் வேலை இழந்து தங்கள் வீடுகளிலையே முடங்கியுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும், கொரோனா தடுப்பு நிவாரண நிதியாகவும் பல்வேறு நிறுவனங்கள், பிரபலங்கள், சாதாரண மக்கள் நிதி உதவி செய்துவருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா நிவாரண நிதியாக நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் 3 கோடி அறிவித்திருந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களே குறைந்த அளவில் உதவி தொகை கொடுத்துள்ள நிலையில், லாரன்ஸின் இந்த மிகப்பெரிய தொகை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ். அதாவது, தான் 3 கோடி தருவதாக கூறியிருந்தேன். ஆனால், அதன்பிறகு பலதரப்பு மக்கள் தன்னை தொடர்பு கொண்டு தங்களுக்கும் உதவி செய்யுமாறு தன்னை கேட்பதாகவும், வீடியோ அனுப்புவதாகவும் லாரன்ஸ் கூறியுள்ளார்.

வீடியோவில், போனில் அவர்களின் குரலை கேட்கும்போது தன்னால் இரவில் தூங்க முடியவில்லை. வரும்போது என்ன கொண்டுவந்தோம்! போகும்போது எதை கொண்டுசெல்லப்போகிறோம். எனவே, இதுபோன்ற நேரத்தில் உதவி செய்வது மிகவும் பாக்கியமாக நினைக்கின்றேன்.

எனவே, எனது நண்பர்கள் மற்றும் ஆடிட்டரிடம் கலந்துபேசிவிட்டு இன்று மாலை கூடுதல் நிதி உதவி வழங்குவது பற்றி அறிவிக்கிறேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.


Advertisement