டி ராஜேந்தரை தேடிச்சென்று 15 லட்சம் உதவி செய்த ராகவா லாரன்ஸ்..! என்ன காரணம் தெரியுமா.?ragava-lawrence-helped-15-lakhs-to-distributors

கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக பலரும் தங்களால் முடிந்த நிதி உதவியினை செய்துவருகின்றனர். இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் கொரோனா நிவாரண நிதியாக 3 கோடி அறிவித்திருந்தார்.

3 கோடி ரூபாயில்,  50 லட்சம் மத்திய அரசு நிவாரண நிதிக்கும், 50 லட்சம் தமிழக அரசின் நிவாரண பணிக்கும், 50 லட்சம் சினிமா துறையை சேர்ந்த பெப்சி அமைப்புக்கும், 50 லட்சம் நடன இயக்குனர் அமைப்புக்கும், 25 லட்சம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், மேலும், 75 இலட்சம் ராயபுரம் பகுதி தினக்கூலி மக்களுக்கும் தருவதாக லாரன்ஸ் கூறியிருந்தார்.

corono

இந்த 3 கோடி இல்லாமல், மேலும் தான் நிவாரணம் வழங்குவதாக லாரன்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 25 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துள்ளார் லாரன்ஸ். அதுமட்டும் இல்லாமல், சென்னை செங்கல்பட்டு மாவட்டம் விநியோகிஸ்தர் சங்கத்தினர் நலனுக்காக ரூபாய். 15 லட்சத்தை சென்னை-செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் டி ராஜேந்தர் அவர்களிடம் அளித்துள்ளார் லாரன்ஸ்.

லாரன்ஸின் இந்த உதவிக்கு டி ராஜேந்தர் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.