சினிமா

கொரோனாவால் பாதித்த நிறைமாத கர்ப்பிணி..! நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியால் அந்த பெண்ணுக்கு நடந்த பிரசவம்.!

Summary:

Ragava lawerence helped pregnant women

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்துவருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் அதில், தனக்கு தெரிந்த ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், நிறைமாத கர்ப்பிணியான அவர் குழந்தை பிறகும் தருவாயில் இருந்த நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல உதவி கேட்டு அவரது கணவரும், மாமனாரும் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டார்கள்.

நான் உடனே இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சாரின் பி.ஏ.வான ரவி சாருக்குத் தெரிவித்தேன். அவர் நிலைமையின் தீவிரம் அறிந்து அந்த கர்ப்பிணி பெண்ணின் வீட்டிற்கே நேரடியா சென்று ந்த கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துப்போய் கீழ்பாக்கம் கே.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தார்.

அந்த பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தனர். தற்போது அந்த பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் நலமாக உள்ளது.

அந்த பெண்ணும் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வருவார். அதற்கா நான் கடவுளை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். மேலும், இந்த நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார் மற்றும் அவரது பி.ஏ. ரவி சாருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார் நடிகர் லாரன்ஸ்.


Advertisement