என்னது.. கோமா நிலையில் உள்ளாரா வாணி ராணி சீரியல் பிரபல நடிகர்! நடிகை ராதிகா வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

என்னது.. கோமா நிலையில் உள்ளாரா வாணி ராணி சீரியல் பிரபல நடிகர்! நடிகை ராதிகா வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!


radhika-tweet-about-actor-venu-aravind-health-issue

பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் வேணு அரவிந்த். இவர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஒளிபரப்பான காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். 

மேலும் அவர் வாழ்க்கை, அலைகள், அக்னி சாட்சி மற்றும் ராதிகா நடிப்பில் வெளிவந்த செல்வி, அரசி, வாணி ராணி, சந்திரகுமாரி போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானார். இந்த நிலையில் வேணு அரவிந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றதாக செய்திகள் பரவி வந்துள்ளது.

இதுகுறித்து நடிகை ராதிகா தனது டிவிட்டர் பக்கத்தில், ஊடகங்கள் சில வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாக செய்தி வெளியிடுவது வருத்தமளிக்கிறது. அவரது உடல்நிலையை நானும் அவரது மனைவியும் கவனித்து வருகிறோம். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், ஆனால் தற்போது அவரது உடல்நலம் சீராக உள்ளது. அவர் மிகவும் சிறந்த மனிதர். விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள். தவறான செய்தி பரப்புவதை நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.