இப்போ 4 பேர்! நடிகை ராதிகா வீட்டில் மீண்டும் விசேஷம்! செம உற்சாகத்தில் குவியும் வாழ்த்துக்கள்!

இப்போ 4 பேர்! நடிகை ராதிகா வீட்டில் மீண்டும் விசேஷம்! செம உற்சாகத்தில் குவியும் வாழ்த்துக்கள்!



Radhika daughter rayane blessed with second baby

தமிழில் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. 70 மற்றும் 80களில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.  பின்னர் சமீபகாலமாக பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார்
மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது சித்தி 2 தொடரில் நடித்து வருகிறார்.

நடிகை ராதிகாவுக்கு ரயானே என்ற மகள் உள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவருடன் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

Radhika

இந்நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அதனை தொடர்ந்து அவர் மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக ரயானே தெரிவித்துள்ளார்.அந்த பதிவில் அவர் இப்போது 4 பேர்.  எங்களுக்கு லேடி பாஸ் வந்துவிட்டார் என  மிகவும் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

Our Boss Lady has arrived 💕 15.03.20

A post shared by Rayane Mithun (@rayanemithun) on