காவேரி விவகாரம் குறித்து வைரலான விஜயின் ஆடியோ: புஸ்ஸி ஆனந்த் கடும் எச்சரிக்கை.! உண்மை இதுதான்.!



Pussi Anand Warning about Vijay Fake Audio Release 

 

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் நகரில் நடைபெற்ற சித்தா திரைப்பட விளம்பரத்திற்கு சென்றிருந்த நடிகர் சித்தார்த், பாதியில் கன்னட அமைப்புகளால் வெளியேற்றப்பட்டார். 

இதற்கு நேற்று பெங்களூரில் நடந்த காவேரி நீர் எங்களுக்கே என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவராஜ் குமார் கண்டித்து, சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்பதாக கூறியிருந்தார். 

காவேரி நீர் பிரச்சனையில் கர்நாடகா - தமிழ்நாடு இடையே பரபரப்பு சூழல் எட்டியிருக்கும் நிலையில், நேற்று விஜய் பேசியதாக போலியான ஆடியோ ஒன்று வைரலாகி இருந்தது.

இந்த ஆடியோ விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ள விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இவ்வாறான பொய் செய்திகளை பரப்புவோர் மீது எதிர்காலத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 

இதுபோன்ற உண்மையற்ற தகவலை பரப்ப வேண்டாம். விஜயின் குரலில் வெளியான ஆடியோ பொய்யானது என தெரிவித்துள்ளார்.