தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
"ஊ சொல்றியா மாமா" பாடலுக்கு சமந்தா தயாரானது எப்படி?.. படக்குழு வீடியோ வைரல்.!

சுகுமார் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மாடானா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் கடந்த டிச. 17 ஆம் தேதி தெலுங்கு, கன்னடா, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் திரையிடப்பட்டது.
ரூ.200 கோடி தயாரிப்பில் உருவான திரைப்படம், 5 மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்தது. இதனால் ரூ.300 கோடிக்கு மேல் தற்போது வரை வசூல் நடந்துள்ளது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் மாவட்டத்தில் நடைபெறும் செம்மர கடத்தல் தொடர்பான கதை பின்னணியுடன் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் சில வருடங்கள் கழித்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் இடம்பெற்று இருந்த ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்த நிலையில், அதுகுறித்த மேக்கிங் வீடியோ படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.