சினிமா

ஓட்டு போட நம்ம குக் வித் கோமாளி புகழ் எப்படி போயுள்ளார் பார்த்தீர்களா! வேற லெவலில் மாஸ் காட்டுறாரே!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டதன் மூலம் தனது ரகளையாலும், சேட்டையாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து புகழுக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அவர்
தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. மேலும் புகழ் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திலும், சந்தானம் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் எளிமையாக சைக்கிளில் சென்று ஓட்டளித்தார். அது பெருமளவில் டிரெண்டானது. அவரை போலவே புகழும் சாதாரணமாக பைக்கில் சென்று வாக்களித்துள்ளார். இந்நிலையில் புகழை அடையாளம் கண்ட ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தே வந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement