அஜித்தின் சூப்பர்ஹிட் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.! அதிர்ச்சியில் திரையுலகினர் இரங்கல்!!

அஜித்தின் சூப்பர்ஹிட் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.! அதிர்ச்சியில் திரையுலகினர் இரங்கல்!!



Producer chakaravarthy passed away

அஜித் நடிப்பில் வெளிவந்த பல படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உடல்நல குறைவால் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி காலமாகியுள்ளார்.

அஜித்தின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ராசி, வாலி முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ , வரலாறு ஆகிய படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி. மேலும் அவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த காளை, வாலு, விக்ரமின் காதல் சடுகுடு போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

Chakaravarthy

அதுமட்டுமின்றி அவர் கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த ’விலங்கு’ என்ற வெப் தொடரில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கடந்த எட்டு மாதமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அவர் காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்று மாலை சென்னையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.