சினிமா

வீடியோ! கப்பலில் கணவர், நண்பர்களுடன் குதூகலமாக ஆட்டம் போடும் ப்ரியங்கா சோப்ரா!

Summary:

Priyanga chopra in miomi with husband

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட்டில் பிரபலமானவர். மேலும்  ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராவார்.

பல வெற்றி படங்களை கொடுத்த இவருக்கு ஹாலிவுட்டில் ஒரு பிரபல சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் உலக அளவில் பிரபலமானார் பிரியங்கா.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு ப்ரியங்கா, தன்னைவிட 11 வயது குறைந்த பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

அதனை தொடர்ந்து ப்ரியங்கா தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி தீவில் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார் ப்ரியங்கா சோப்ரா. அப்போது கப்பல் ஒன்றில் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கணவன் மனைவி இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

View this post on Instagram

Sucker vibes in Miami.

A post shared by Nick Jonas (@nickjonas) on


Advertisement