"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
சந்தானத்துக்கு ஜோடியாகும் செம்பருத்தி சீரியல் நடிகை.. அடடே இவரா?
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக நடித்து வருபவர் சந்தானம். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்க, எழுச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். மேலும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, முனீஸ்கான் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக செம்பருத்தி சீரியல் நடிகை பிரியாலயா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை சீரியல்களில் மட்டுமே நடித்து வந்த பிரியாலயா, இந்த திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.