சினிமா

கடல் அலையில் சிக்கிய டிடியின் அக்கா! சூட்டிங் போது நடந்த விபரீதம்!! ரசிகர்கள் ஷாக்!!

Summary:

கடல் அலையில் சிக்கிய டிடியின் அக்கா! சூட்டிங் போது நடந்த விபரீதம்!!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் பிரியதர்ஷினி. இவர் டிடியின் அக்கா ஆவார். இவர் பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். பிரியதர்ஷினி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வருகிறார்.

இவர் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். திவ்யதர்ஷினி பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி என பல நடனங்களையும் கற்று தேர்ந்துள்ளார். இந்த நிலையில் அவர் அண்மையில் மகாபலிபுரம் கடற்கரையில் நடன பயிற்சி மேற்கொண்டு அதனை வீடியோவாக எடுத்துள்ளார். அப்பொழுது அங்கிருந்த பாறைகள் மீது அவர் ஆடிக் கொண்டிருந்தபோது கடலலைகள் வந்துள்ளது.

அதையும் பொருட்படுத்தாமல் அவர் ஆடிக்கொண்டிருந்த போது பெரிய அலை வந்துள்ளது. அதில் சிக்கிக் கொண்ட அவர் பின்னர் சுதாரித்து எழுந்து வந்துள்ளார். இந்த வீடியோவை அவர் சூட்டிங் பரிதாபங்கள் என தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள், பார்த்து.. ஜாக்கிரதை அக்கா என கமெண்ட் செய்து வருகின்றனர். 


Advertisement