நான் 9-ம் வகுப்பு படிக்கும்போதே...தனது காதல் வாழ்க்கை குறித்து போட்டுடைத்த ப்ரியா வாரியர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நான் 9-ம் வகுப்பு படிக்கும்போதே...தனது காதல் வாழ்க்கை குறித்து போட்டுடைத்த ப்ரியா வாரியர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மலையாள சினிமாவில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைபடத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். இந்த படத்தில் இவர் தனது புருவத்தை தூக்கி கொடுத்த முக பாவத்தில் ஏராளமானோர் சொக்கி போனர்.
இந்த படம் இவருக்கு பேரும், புகழும் பெற்றுத்தந்த நிலையில் அதே படம் மூலம் இவர் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தார். ஆனாலும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் அதனை தொடர்ந்து சமீபத்தில் ப்ரியா வாரியார் நடித்திருந்த ஸ்ரீதேவியின் பங்களா படத்தின் டிரைலரும் மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.
சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ப்ரியா அவ்வப்போது தனது ரசிகர்களை கவர்வதற்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் பிரியா வாரியார் தனது காதல் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில் அவர், நான் 9-ம் வகுப்பு படித்தபோது ஒரு பையன் என்னிடம் காதலை சொன்னான். நானும் அவனுடைய காதலை ஏற்று கொண்டேன். பின்னர் நாளடைவில் அது ஒரு இன ஈர்ப்பு என்பதை இருவரும் புரிந்து கொண்டோம். பின்னர் இருவரும் பேசி பிரிந்து விட்டோம் என்று கூறியுள்ளார்.