சினிமா வீடியோ

படப்பிடிப்பில் விபத்து! கீழே விழுந்து பிரபல நடிகைக்கு தலையில் அடி! வைரலாகும் பதறவைக்கும் பகீர் வீடியோ!!

Summary:

மலையாளத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்

மலையாளத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர்  பிரியா வாரியர்.  இவர் இந்த திரைப்படத்தில் ஒற்றை புருவத்தை உயர்த்தி, கண் அடித்தது மூலம் உலகளவில் புகழ் பெற்றார். இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு மலையாளத்தில் ஏராளமான படவாய்ப்புகள் குவிந்தது. 

மேலும் இவருக்கென ஏரளமான ரசிகர்களும் உருவாகினர். இந்த நிலையில் நடிகை பிரியா வாரியார் தற்போது தெலுங்கு சினிமாவில் காலடி பதித்துள்ளார். அதாவது அவர் செக் என்ற படத்தில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாவ்யா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சந்திரசேகர் லேயட்டி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு கல்யாணி மாலிக் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலும் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இப்பாடலில் நடிகர் நிதின் ஹீரோயின் பிரியா வாரியரை தூக்குவது போன்ற ஒரு காட்சி உள்ளது. அந்த காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும்போது பிரியா வாரியார் கீழே தவறி விழுகிறார் அப்பொழுது அவரது தலையில் அடிபடுகிறது. இந்த வீடியோவை பிரியா வாரியார் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 


Advertisement