மேடையில் ஹன்சிகாவை பற்றி கொச்சையாக பேசிய ரோபோ சங்கர்.. எச்சரிக்கை விடுத்த பத்திரிக்கையாளர்கள்.?Press people warned robo sanker

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வருகிறார்.

Hansika

தற்போது மனுஷ தாமோதரன் இயக்கத்தில் நடிகர் ஆதி கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் 'பார்ட்னர்' படத்தில் யோகி பாபு, பாண்டியராஜன், ஜான்விஜய், ரோபோ சங்கர் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பில் ஆதி, ஹன்சிகா, ஜான்விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் ரோபோ சங்கர் ஹன்சிகாவை குறித்து கொச்சையாக பேசினார்.

Hansika

ரோபோ சங்கர் பேசியதாவது, "இப்படத்தின் ஒரு காட்சியில் ஹன்சிகாவின் காலை நான் தடவ வேண்டும். ஹன்சிகா இதற்கு மறுத்துவிட்டார். மேலும் கதாநாயகன் ஆதி தடவுவதற்கு மட்டுமே ஹன்சிகா ஒத்துழைக்கிறார். காமெடியன் எப்போதும் காமெடி தான்" என்று ஹன்சிகாவைக் குறித்து கொச்சையாக பேசியதற்கு பத்திரிகையாளர்கள் ரோபோ சங்கருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.