சினிமா விளையாட்டு

உங்க மகளை கடத்தப்போகிறேன்.! புகைப்படத்துடன் தோனிக்கு எச்சரிக்கை விடுத்த பிரபலம்!!

Summary:

preethi jintha warned to dhoni about ziva

கடந்த 5ம் தேதி, மொகாலியில் பஞ்சாப் அணிக்கும், சிஎஸ்கே அணிக்கும் இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணி சென்னையை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆனாலும் பஞ்சாப் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வில்லை. 

அன்று போட்டி முடிந்ததும் பஞ்சாப் அணியின் உரிமையாளரும் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா சென்னை அணியின் கேப்டன் தோனியை சந்தித்து பேசியுள்ளார்.ப்ரீத்தி ஜிந்தா க்கான பட முடிவு

இதனைத்தொடர்ந்து நடிகை ப்ரீத்தி ஜிந்தா தோனியை சந்தித்து பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அதில் அந்த ட்விட்டர் பதில், “கேப்டன் கூல் தோனிக்கு, நான் உட்பட ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த முறை எனது அன்பு அவரது செல்ல மகள் ஸிவாவை நோக்கி மாறியுள்ளது. இந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது, அவரிடம் நான் ஸிவாவைக் கடத்தலாம் என இருக்கிறேன். எச்சரிக்கையாக இருங்கள் என கூறினேன்” என்று ப்ரீத்தீ ஜிந்தா குறிப்பிட்டுள்ளார்.


 


Advertisement