"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
என்னா ஒரு மாற்றம்..! புது படத்திற்காக ஆளே மாறிப்போன நடிகர் பிரசாந்த்.. பூஜையுடன் தொடங்கியது பிரசாந்த்தின் அடுத்த படம்..
பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பமாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகர் பிரசாந்த். கடந்த சில வருடங்களாக இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சரியாக ஓடாத காரணத்தினால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். அதுபோக இவரது உடல் எடையும் தாறுமாறாக ஏறியதை அடுத்து அதுவும் இவரது சினிமா பயணத்திற்கு முட்டு கட்டையாக அமைந்தது.
இதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்துவந்த பிரசாந்த் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்க உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான அந்தாதூன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது. தற்போது இந்த படம் அந்தகன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கின்றார். மேலும் நடிகை சிம்ரன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
மேலும் இந்த படத்திற்க்காக முன்பு இருந்ததைவிட நடிகர் பிரசாந்த் பலமடங்கு உடல் எடையை குறைத்து, மீண்டும் பழைய சாக்லேட் ஹீரோபோல் மாறியுள்ளார்.