பிரபல நடிகர் பிரசாந்த்துடன் இணையும் இந்திய அழகி! யார் அவர் தெரியுமா?

பிரபல நடிகர் பிரசாந்த்துடன் இணையும் இந்திய அழகி! யார் அவர் தெரியுமா?


Prasanth

தமிழில் 1990 யில் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.

இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைகள் என்பதால் அவரின் நடிப்பு மற்றும் ஸ்டைலுக்கு என்று பெண் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதனை தொடர்ந்து படவாய்ப்புகள் குறையவே நடிப்பிலிருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்தார்.

Prasanth

தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துவருகிறார். இப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். மேலும், அவரின் தந்தையான தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக மிஸ் இந்திய 2018 அனு கீர்த்தி வாஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அந்தாதுன் திரைப்படத்தில் நடிகை ராதிகா ஆப்தே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.