சினிமா

சோகம் மட்டும்தான் மிஞ்சும்! இது ஒரு தேசியவியாதி! வேதனையோடு புலம்பும் நடிகர் பிரசன்னா! எதனால் தெரியுமா?

Summary:

Prasanna tweet about tamilnadu controvarsy incidents

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது ஒருபுறமிருக்க நாளுக்கு நாள் தமிழகத்தில் கொடூர சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.  ஊரடங்கில் சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் ஜெயராம், பென்னிக்ஸ் மரணம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இது தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினரை சிபிசிஐடி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஏம்பல் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் மேலும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த கொடூர சம்பவத்திற்கு பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர் 

 இந்நிலையில் நடிகர் பிரசன்னா இந்த சம்பவங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெயலலிதா அல்லது ஜெயராஜ்  அல்லது ஜெயப்ரியா..அது அடுத்த பரபரப்பான மரணம்/ கொலை/ பாலியல் வன்கொடுமை குறித்த செய்தி வரும்வரைதான். அதன் பிறகு நீதி கேட்கும் ஹேஷ்டேக்குகள் மாறிவிடும். ஆனால் மாற வேண்டியது எதுவும் மாறாது. இவையெல்லாம் சோர்வை ஏற்படுத்திவிட்டன. சோகம் மட்டுமே மிஞ்சுகிறது. மறதி ஒரு தேசிய வியாதி என பதிவிட்டுள்ளார்.


Advertisement