சினிமா

கொரோனா லாக்டவுனில், ஒருவழியாக 7 வருட காதலரை கரம்பிடித்தார் பிரபல நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!

Summary:

Praachi tehlaan got married with his 7 years lover

கடந்த ஆண்டு பத்மகுமார் இயக்கத்தில் வெளியான படம், மாமாங்கம். மலையாளத்தில் உருவான இந்தப் படம், தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியானது.  இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை 
பிராச்சி தெஹ்லான். டெல்லியை சேர்ந்த இவர் கூடைப்பந்தாட்ட வீராங்கனை. தேசிய அளவில் பல  போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். இந்தி சீரியல் மூலம் அறிமுகமான இவர், சில பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார்.

பிராச்சி தெஹ்லான் டெல்லியை சேர்ந்த ரோகித் சரோஹா என்ற தொழிலதிபரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தநிலையில் இருவரும்  திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணம் நேற்று டெல்லி அருகேயுள்ள பண்ணை வீடு ஒன்றில் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள்,  நண்பர்கள் என 50 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். மேலும் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக்கண்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement--!>