சினிமா

இயக்குனர் பாக்யராஜ் குடும்பத்தில் ஏற்பட்ட சோகம்! திரையுலகினர் பலரும் இரங்கல்!

Summary:

poornima pakiyaraj mother passes away


பிரபல இயக்குனரும், நடிகர் பாக்யராஜின் மாமியாரும், நடிகை பூர்ணிமாவின் தாயுமான சுப்புலட்சுமி காலமானார். தற்போது இவருக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகினர். 

தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். இவர் நடித்த பல படங்கள் வெற்றி படங்கள் ஆகியது. இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  இயக்குனர் பாக்யராஜ் பிரபல நடிகையான பூர்ணிமாவை கடந்த 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

இன்று காலை வயது முதிர்வு காரணமாக பாக்யராஜின் மாமியார், பூர்ணிமா பாக்யராஜின் அம்மா 85 வயதான சுப்புலட்சுமி ஜெயராம் இன்று காலை உயிரிழந்துள்ளார். வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுப்புலட்சுமி இறந்துள்ளார். இவரது இறுதி சடங்கு இன்று நடைபெற இருக்கிறது. மேலும், இவர் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement