சினிமா

நீச்சல்குளத்தில் மிக நெருக்கமாக... முதன்முதலாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா! குவியும் வாழ்த்துக்கள்!

Summary:

நடிகை பூனம் பாஜ்வா முதன்முதலாக தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அவர் பெருமளவில் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

பூனம் பாஜ்வா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் பூனம் பாஜ்வா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.

இந்நிலையி பூனம் பாஜ்வா  இன்று தனது காதலரான சுனில் ரெட்டியை  இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைக்கண்ட நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


Advertisement