விஸ்வாசம், பேட்ட படங்களை இணையத்தில் வெளியிட தடை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

pongal release - visvasam ajith - petta rajinikanth


pongal release - visvasam ajith - petta rajinikanth

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் பேட்ட, விஸ்வாசம் படங்களை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் படையை கொண்டவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தல அஜித். இவர்களில் ஒருவரது படம் வெளியானாலே தமிழகத்தில் திருவிழா போல தான் இருக்கும். ஆனால் இருவரின் படங்களும் ஓரே நேரத்தில் வெளியானால் சொல்லவா வேண்டும். 

Ajith Kumar

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். அதேபோல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட.

சமீபகாலமாக சட்டத்திற்குப் புறம்பாக இணையதளத்தில் புதிய படங்கள் வெளியாகி வருகின்றன. இதனால் படங்களில் பணியாற்றிய படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

Ajith Kumar

இந்நிலையில் இவ்விரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சுந்தர் அடங்கிய நீதி அமர்வு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் இவ்விரண்டு படங்களையும் இணையதளத்தில் வெளியிட தடைவிதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.