சினிமா

ரஜினி படநடிகைக்கு போலீசார் தீவிர வலைவீச்சு.! கடுப்பாகி அவரே என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Summary:

police case file on sonakshi sinha

தமிழ் சினிமாவில் லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சோனாக்ஷி சின்கா. இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். சோனாக்ஷி பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகர் சத்ருகன்  சின்காவின் மகளாவார்.

நடிகை சோனாக்ஷி சமீபத்தில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த 24 லட்சம் ரூபாயை முன்பணமாக பெற்றுள்ளார். ஆனால் இறுதியில் நிகழ்ச்சிக்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சோனாக்ஷி சின்கா மீது காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

தொடர்புடைய படம்

அதனை தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட போலீசார்கள் நேற்று மும்பையில் உள்ள சோனாக்ஷியின் வீட்டிற்கு விசாரணைக்காக சென்றுள்ளனர்.ஆனால் அவர் வீட்டில் இல்லாததால் திரும்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகை சோனாக்ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், சொன்னதை நிறைவேற்ற முடியாத நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தற்பொழுது எனது பெயரை கெடுத்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். மேலும் விசாரணை முடியும் வரை சரியான முறையில் ஒத்துழைக்க நான் தயாராக உள்ளேன் என பதிவிட்டுள்ளார். 


Advertisement