இப்படியும் இருக்காங்களே..16 வயது சிறுமிக்கு தந்தை செய்த காரியம்! தட்டி தூக்கி கைது செய்த போலீசார்கள்!

இப்படியும் இருக்காங்களே..16 வயது சிறுமிக்கு தந்தை செய்த காரியம்! தட்டி தூக்கி கைது செய்த போலீசார்கள்!



police-arrest-father-who-arrange-marriage-for-16-years

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவை சேர்ந்தவர் பொன்னுசாமி. 40 வயது நிறைந்த இவருக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இவருக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது அவரது அப்பா தன்னை விட ஒரு வயது அதிகம் மிகுந்த 41 வயது நிறைந்த சுரேஷ் என்பவருக்கு தனது மகளை திருமணம் செய்ய இருவீட்டார்கள் சம்மதத்துடன் முடிவு செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து 16 வயது பள்ளி மாணவியான அந்த சிறுமிக்கு சுரேஷுடன் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியின் திருமணம் குறித்து இரு குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் சிறுமிக்கு திருமணம் வைக்க ஏற்பாடு செய்ததற்காக சிறுமியின் தந்தை மற்றும் 41 வயது நிறைந்த மாப்பிள்ளை சுரேஷ் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.