பிரபல டிவி தொகுப்பாளர் ஹீரோ! சீரியல் நடிகர் வில்லன்!! நண்பர்கள் கூட்டணியுடன் களமிறங்குகிறார் இயக்குனர்!!

பிரபல டிவி தொகுப்பாளர் ஹீரோ! சீரியல் நடிகர் வில்லன்!! நண்பர்கள் கூட்டணியுடன் களமிறங்குகிறார் இயக்குனர்!!


poduction no1 movie pooja photo viral

தமிழ் சினிமாவில் நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர் அணி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரித்து இயக்கும் புதிய படம் ப்ரொடக்ஷன் நம்பர் ஒன். இப்படத்தின் கதாநாயகனாக கலைஞர் டிவி தொகுப்பாளர் தணிகை நடிக்க உள்ளார். மேலும் கதாநாயகியாக அறிமுக நடிகை குயின்ஸ்லி என்பவரும் படத்தின் வில்லனாக சன்டிவி மற்றும் விஜய் டிவி புகழ் பாண்டி கமல் என்பவரும் நடிக்க உள்ளனர்.  

மேலும் இப்படம் சைக்கோ த்ரில்லர் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளது. இப்படத்திற்கு சம்சத் என்பவர் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார் மேலும் சித்தார்த்தா பிரதீப் இசையமைக்கிறார். இருவருமே மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமாக இருப்பவர்கள். 

thanikaiஇந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இதில் ஜாக்குவார் தங்கம், ரோபோ ஷங்கர், எழுமின் விஜய் போன்ற பல பிரபலங்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.

இயக்குனர் நியூட்டன் பிரபு பல குறும்படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் பிரபல பத்திரிகையில் சவுண்ட் இன்ஜினியராகவும் இருந்துள்ளார். இதனை வைத்து நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இப்படத்தை இயக்கவுள்ளனர்.

thanikai