சினிமா

தலைவர் பிறந்தநாளில் பேட்ட படத்தின் விருந்து! வெளியானது மாஸ் டீசர்

Summary:

petta teaser released for rajini birthday

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’.இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம்  பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மேலும் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் படங்களை எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர். 

இந்த நிலையில், ரஜினி தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதற்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 அதனைதொடர்ந்து பிறந்தநாளின் கொண்டாட்டமாக  பேட்ட படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.மேலும் இந்த டீசர் வீடியோவை ரசிகர்கள் அதிகளவில்  சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement