சினிமா

ஓரம்கட்டும் பேட்ட, ஒர்கவுட் ஆகும் விஸ்வாசம்! தெறிக்கவிடும் தல ரசிகர்கள்!

Summary:

Petta and viswasam movie review in tamil

இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்துள்ளது இந்த கூட்டணி. வீரம், வேதாளம் இரண்டும் ஓரளவிற்கு ஹிட் ஆகியிருந்தாலும் விவேகம் படம் படு தோல்வியை தழுவியது. தற்போது விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதே சமயம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ளது பேட்ட திரைப்படம். கபாலி, காலா படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியடையவில்லை என்பதால் பேட்ட படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் பழைய ரஜினியை பேட்ட படத்தில் பார்த்ததாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ஆனால் பேட்ட திரைப்படம் விசுவாசத்துடன் ஒப்பிடும் போது சற்று பின்தங்கியே உள்ளது என நடுநிலையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

விஸ்வாசம் படம் முதல் பாதி சற்று தொய்வாக சென்றாலும், படத்தின் இரண்டாம் பாதியில் பின்னி பெடெலெடுத்துள்ளனர் படக்குழுவினர். விஸ்வாசம் படம் பார்க்க குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் செல்வதை காண முடிகிறது.

அதேசமயம், பேட்ட படம் முதல் பாகம் ஓகே என்றாலும், இரண்டாம் பாகம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதே உண்மை. படத்தின் முதல் பாதி ஒரு கதையும், இரண்டாம் பாதி வேறொரு கதையும் போல திரைக்கதை அமைந்துள்ளது பேட்ட படத்திற்கு சற்று சருக்காலாகவே உள்ளது.


Advertisement