விஜய்டிவி ரசிகர்களே உங்களுக்குத்தான்.. நீங்கள் நீண்டநாள் எதிர்பார்த்த சீரியல் முடிவுக்கு வருகிறது..! எந்த தொடர் தெரியுமா?..!!



Pavam Ganeshan Serial may be Ends

தற்போதைய காலகட்டத்தில் சீரியல்கள் தான் மக்களின் உயிர்மூச்சாக இருக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரையிலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களை மட்டுமே காண்கின்றனர்.

அந்த வகையில் மக்களை மிகவும் கவர்ந்த தொலைக்காட்சி விஜய் டிவி. மக்களுக்கு பிடித்தமான நெடுந்தொடர்கள் விஜய்டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் சில பழைய தொடர்கள் எப்பொழுது முடியும், எப்பொழுது முடிப்பீர்கள்? என்ற கேள்வியை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.

Pavam Ganesha

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் மதியம் ஒளிபரப்பாகும் தொடர் பாவம் கணேசன். பலரது குரல்களிலும் பேசி மக்களிடம் பிரபலமான நவீன் இத்தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

கடந்த 2021-ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் கிட்டத்தட்ட 320 எபிசோடுகளை எட்டியுள்ளது. மக்கள் முதலில் இதனை விரும்பி பார்த்தாலும் சிறிது நாட்களிலேயே எப்பொழுது சீரியலை முடிப்பீர்கள்? என கேட்க தொடங்கிய நிலையில், சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

ஆனாலும் சிலர் இந்த தொடரும் முடிகிறதா? மிஸ் செய்யப்போகிறேன் என்றும் பதிவு செய்து வருகின்றனர். அதிலும் சிலர் பாரதி கண்ணம்மாவை எப்பொழுது முடிப்பீர்கள்? என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளனர்.