விருதை வாங்க பார்த்திபன் எப்படி சென்றுள்ளார் பார்த்தீர்களா. ! அனைவரின் கவனத்தையும் ஈர்த்த புகைப்படம் இதோ!!

விருதை வாங்க பார்த்திபன் எப்படி சென்றுள்ளார் பார்த்தீர்களா. ! அனைவரின் கவனத்தையும் ஈர்த்த புகைப்படம் இதோ!!


parthiban-wear-single-shoe-when-he-got-award

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக பிரபலமடைந்தவர் பார்த்திபன். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் புதியபாதை, சுகமான சுமைகள், குடைக்குள் மழை பச்சக்குதிரை, கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற பல படங்களை இயக்கியும் உள்ளார்.

மேலும் எப்பொழுதும் வினோதமான புதிய முறையில் யோசிக்கும் பார்த்திபன், கிண்டல் கலந்த கலகலப்பான பேச்சால் ஏராளமான ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் தற்போது ஒத்த செருப்பு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அவரே இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.

parthibanஇப்படத்தில் பார்த்திபன் மட்டுமே தனிக்கதாபாத்திரமாக நடித்துள்ளார். மேலும் பின்னணி இசையை இசையமைப்பாளர் சி. சத்யா என்பவரும் ஒரு பாடலுக்கு மட்டும் சந்தோஷ் நாராயணன் என்பவரும் இசையமைத்துள்ளனர். இப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் சமீபத்தில் ஒத்த செருப்பு படத்திற்காக பார்த்திபன் அவர்களுக்கு வி அவார்ட்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. அப்பொழுது விருது விழாவில் விருது வாங்க சென்றபோது பார்த்திபன் தன்னுடைய காலில் ஒத்த ஷூ மட்டும் அணிந்து சென்றுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

parthiban