சினிமா

பிரபல விருது விழா குறித்து கோபமாக நடிகர் பார்த்திபன் வெளியிட்ட பதிவு! இதுதான் காரணமா?

Summary:

parthiban tweet about ananda vigadan award function

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக பிரபலமடைந்தவர் பார்த்திபன். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் புதியபாதை, சுகமான சுமைகள், குடைக்குள் மழை பச்சக்குதிரை, கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற பல படங்களை இயக்கியும் உள்ளார்.

மேலும் எப்பொழுதும் வினோதமான புதிய முறையில் யோசிக்கும் பார்த்திபன், கிண்டல் கலந்த கலகலப்பான பேச்சால் ஏராளமான ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் ஒத்த செருப்பு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அவரே இயக்கியும், தயாரித்தும் உள்ளார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஏராளமான விருதுகளையும் பெற்றது.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் கடந்த மாதம் பிரபல இதழ் நடத்திய விருதுவிழாவில் அவர் பங்கேற்றார். ஆனால் ஒத்த செருப்பு படத்திற்கு எந்த விருதும் தரப்படவில்லை. இந்நிலையில் இன்று அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டுள்ளது. அதுகுறித்து ட்விட்டரில் அவர் நல்ல கலைக்கே விருதில்லை, இதில் மகா என கலாய் வேறு என கூறி தன் கோபத்தை பதிவு செய்துள்ளார்.


Advertisement