எனது கேரக்டரில் அவர் நடிப்பார்.! ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் பார்த்திபன் உடைத்த உண்மை!! யார்னு தெரியுமா??

எனது கேரக்டரில் அவர் நடிப்பார்.! ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் பார்த்திபன் உடைத்த உண்மை!! யார்னு தெரியுமா??


parthiban-talk-about-aayirathil-oruvan-part-2

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தஞ்சையில்  திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார். பின்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். அதனை தொடர்ந்து  பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பல கேள்விகளுக்கும்
பதிலளித்துள்ளார்.

parthiban

அப்பொழுது அவரிடம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் விரைவில் வரும். ஆனால் அதில் எனக்கு பதிலாக தனுஷ் நடிப்பார். முதல் பாகத்திலேயே எனது கேரக்டரில் தனுஷ்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதில் நான் நடிக்க வேண்டியதாயிற்று. தற்போது இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிப்பார். அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.