சினிமா

நடிகர் பார்த்திபன் வீட்டில் விசேஷம்! கொண்டாட்டத்தில் மூழ்கிய குடும்பத்தினர்.!

Summary:

parthiban firdt daughter marriage


தமிழகத்தின் முன்னணி நடிகர்களான பார்த்திபன்-சீதா காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பார்த்திபனுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். பார்த்திபன்-சீதா இவர்கள் இருவரும் 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 

சில பிரச்சனையால்  இவர்கள், பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக கூறி 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

இவர்களது இளைய மகள் கீர்த்தனாவுக்கு கடந்த வருடம் தான் திருமணம் நடந்து முடிந்தது. இப்போது அவர்களது வீட்டில் மீண்டும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

அவர்களது மூத்த மகள் அபிநயாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. மாப்பிள்ளை நரேஷ் கார்த்திக், இவர் நடிகர் எம்.ஆர். ராதாவின் குடும்பத்தினர் எனவும் கூறுகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் ஹோட்டலில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மேலும் திருமணம் வரும் மார்ச் மாதம் 24ம் தேதி நடக்க உள்ளதாக கூறுகின்றனர்.

 


Advertisement